invisible hit counter

உணவு விஷமானதில் 15 பேர் வைத்தியசாலையில்

In இலங்கை
assam

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உற்கொண்ட உணவு நஞ்சானதால், 12 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட உணவே இவ்வாறு விசமாகியுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள இறைச்சிக்கடையொன்றில் இறைச்சியைப்பெற்று வீட்டில் சமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் வீட்டை பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது சமைக்கப்பட்ட இறைச்சியே இவ்வாறு விசமாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

You may also read!

slippery

நீரில் மூழ்கியுள்ள தெற்கு அதிவேகப் பாதை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தெற்கு அதி வேகப் பாதையின் வெளிபன்ன மற்றும் கொக்மாதுவ உள்நுழையும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி ஊடாக

Read More...
kodanadu_estate_1_08585

கொடநாடு கொலை குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்!!

கொடநாடு எஸ்டேட்டில், இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, வட இந்தியாவில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்யும்  நடவடிக்கைகளில் பொலிஸார்

Read More...
maitri

உண்மையை விட பொய் வேகமாக பரவுகிறது-ஜனாதிபதி

அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு பெறுவதற்காக தாய்நாட்டிற்கு எதிரான போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உண்மையை விட பொய் வேகமாகப் பரவுவதாக

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu