இலங்கையில் 3 இலட்சம் அமெரிக்க டொலரினை முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் 2-5 வருடங்களுக்கு தங்கியிருக்க தற்காலிக வீசா வழங்கப்படும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் 1.5மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் நிரந்தரமாக தங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த அவர் குத்தகை அடிப்படையில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.