உடல் முழுவதும் மச்சமா? நீங்களும் மொடலாகலாம்

In அறிவியல்

ஐந்நூறுக்கும் மேற்பட்ட மருக்கள், மச்சங்களுடன் பிறந்து, பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளான இளம் பெண் ஒருவர் ‘மொடலாக’ மாறிய சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

அல்பா பெரிஜோ என்ற இந்தப் பதினாறு வயதுப் பெண், பிறக்கும்போதே ‘மெலனோசைட்டிக் நெவ்யூஸ்’ என்ற கோளாறுடன் பிறந்தவர்.

இந்தக் கோளாறு உடையவர்களது சருமத்தில் பல்வேறு அளவில் நூற்றுக்கணக்கான மருக்களும், மச்சங்களும் காணப்படும். அவற்றில் சிலவற்றில் முடி வளர்ந்தும் காணப்படும்.

இந்தக் கோளாறினால் சிறு வயது முதலே அல்பா பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகினார். ‘டெல்மேஷன்’ நாய் என்றும் வேற்றுக்கிரகவாசி என்றும் இவரது சக மாணவர்கள் இவரைக் கடுமையாகக் கிண்டல் செய்வது வழக்கம். இதனால், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார் அல்பா.

இந்த நிலையில், கடந்த வருடம் இவர் தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.  அவர் சற்றும் எதிர்பார்த்திராத விதத்தில் ஆயிரக்கணக்கான பேர்களின் வரவேற்பைப் பெற்றது அல்பாவின் அந்தப் புகைப்படம்.

இது அவருக்கு மன தைரியத்தைத் தரவே, மொடல்களுக்கான போட்டியொன்றில் கலந்துகொண்டார் அல்பா. தனித்தன்மை வாய்ந்த அல்பாவின் தோற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன.

இப்போது அல்பா பரபரப்பான ஒரு மொடல். பார்சிலோனா நகரின் பல விளம்பரப் பதாகைகளிலும், பேருந்துகளிலும், பத்திரிகைகளிலும் இப்போது சிரித்துக்கொண்டு காட்சி தருகிறார். அதுமாத்திரமன்றி, இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் நடத்துகிறார் அல்பா!

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu