ஊடகத்தை ஆக்கிரமிக்கும் விளம்பரங்கள்

In கட்டுரை

ஊடகம் என்பது வெகுஜனத் தொடர்பாடலில் பயன்படும் சாதனங்களுக்கான இன்றைய மொழிப்பெயர்ப்பு ஆகும்.விஞ்ஞான தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் வெகுஜன தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் மிதமிஞ்சிய வளர்ச்சியை அடைந்து வருகின்றது.இந்த வெகுஜன தொடர்பு சாதனமான ஊடகத்தின் பணியை யுனெஸ்கோ அமைப்பு 8 விதமாக வரையறுத்துள்ளது.

அவையாவன தகவல் பரப்புதல்இசமூகமயமாக்கல்குறிபிட்ட செயலைப் புரியத் தூண்டுதல்,பொதுமக்களின் வெளிப்பாடுகளை ஊக்குவித்தல் ,கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தல்,பண்பாட்டை ஊக்குவித்தல்,மகிழ்ச்சி கொடுத்தல்,முழுமையாக்குதல் என்பனவே ஊடகத்தின் பணிகள் என யுனெஸ்கோ வரையறுத்தாலும், இன்றைய சூழலில் ஊடகங்களின் அடிப்படை நோக்கங்கள் தகவல் பரிமாற்றமாக அல்லாமல் அதிகளவில் இலாபம் சம்பாதிக்கக்கூடிய ஒரு வியாபாரமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

ஒரு நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்றாகிவிட்டது இன்றைய நிலைமை. ஒரு நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கூட ஏற்படுத்தும் வல்லமை இந்த ஊடகத்திற்கு இருப்பதானாலோ என்னவோ இதை நாட்டின் நான்காவது தூண் என்று அனைவரும் கூறுவதில் தவறு இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

இன்று எந்தவொரு விடயத்தையும் ஊடகம் மூலம் கொண்டு செல்வதால் அது இலகுவில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதன்காரணமாக ஒரு சிறிய விடயம் என்றாலும் அதை ஊடகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுவிட்டால் அது சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பாக சேர்ந்து விடும்.அது செய்தியாகவோ,அறவித்தலாகவோ ,அறிவுறுத்தலாகவோ எதுவாக இருப்பினும் அதை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பாரிய பொறுப்பை ஊடகம் வகிக்கிறதென்றால் அது மிகையாகாது.

குறித்த ஊடகம் வானொலி,தொலைக்காட்சி ,பத்திரிகை,இணையம் தற்போது பரவலாக பேசப்படும் சமூக ஊடகங்கள் என இன்று ஊடகத்தின் ஆளுகைக்குள் உலகம் சுருண்டுவிட்டது.எனவே தான் இன்று ஊடகம் தனது தார்மீக கடமைகளை ஒதுக்கிவிட்டு வியாபார நோக்குடன் உலகத்தின் வேகத்துடன் இணைந்து வீறு நடை போடுகின்றது.

adv2

பணம் இல்லாமல் சிறு துரும்பையும் அசைக்க முடியாத இன்றைய காலக்கட்டத்தில் ஊடகம் வளர்வதற்கும்அதில் பணிபுரிவோரை வளர்ப்பதற்கும் பெரும் நிதியினை எதிர்பார்த்தே தனது சமுதாய ஈடுபாட்டை செலுத்துகின்றது.குறிப்பாக இன்று ஊடகங்கள் வளர விளம்பரங்கள் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.விளம்பரங்களால் ஊடகங்களும்இஊடகங்களால் விளம்பரங்கள் தமது வளர்ச்சியை அதிகரித்துகொள்கின்றது.

குறிப்பாக 19ஆம் நூற்றாண்டிலேயே விளம்பரங்கள் ஊடகத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டது. ஆந்த வகையில் ஒரு ஊடகத்தின் வளர்ச்சிக்கு விளம்பரங்கள் அவசியமே ஆனால் குறித்த விளம்பரங்களின் தரங்களை ஊடகங்கள் ஆராய வேண்டியது அவசியமானதாகும். தமது ஊடக நிறுவனங்களுக்கு கிடைக்கும் கோடி ரூபாய்களுக்காக ஊடக தர்மத்தை மீறிய விளம்பரங்களை காட்சிப்படுத்துவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

இன்று பெரும்பாலான ஊடகங்கள் விளம்பரங்களுக்காக மட்டும் செயற்படுவதை அவதானிக்கின்றோம்.இந்த விளம்பரங்களில் எந்தளவு உண்மை உள்ளதென்று ஊடகநிறுவனம் தமது நிறுவனங்களுக்கு கிடைக்கும் கோடிகளுக்கு முன்பு அதனை ஆராய முற்படுவதில்லை.அது எவ்வகையான விளம்பரம் என்றாலும் கவனிப்பதில்லை இன்று விளம்பரங்கள் சிறுவர்கள் மத்தியில் எவ்வளவு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்று சொல்லில் வகைப்படுத்த முடியாது.அதிலும் சிறுவர்களை பயன்படுத்தியே விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதால் அது சிறுவர்களின் மனங்களில் நற்சிந்தனைகளுக்கு பதிலாக தீய சிந்தனைகளையே விதைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.குறிப்பாக தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிட்ட இன்றைய இளம் சமுதாயம் விளம்பரங்களை பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அதனை செயற்படுத்தவும் ஆரம்பிக்கின்றனர்.

adv3

எனவே இன்றைய விளம்பரங்கள் எதிர்கால சந்ததியினரை சீரழிக்களின்றதுடன்,விளம்பரங்களை நம்பி ஏமாறுவோரும் இன்று அதிகரித்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது.குறிப்பாக தம்மை அழகு படுத்துவதில் இன்றைய இளசுகள் தமது உழைப்பில் மட்டுமல்லாது தமது பெற்றோரின் உழைப்பில் பெரும் பகுதியை வீணாக்குகிறார்கள்.இதற்கு முழுமுதற் காரணமாய் விளங்குவது ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களே என்பதை ஆணித்தரமாய் கூறலாம்.

இதில் மிகவும் பார்ப்போரை கவர்ந்திலுக்கும் வகையில் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் அதைப் பார்க்கும் இளசுகளும் இந்த மாயை வலைக்குள் வீழ்ந்து தம்மிடம் உள்ள இயற்கை அழகையும் இழக்கும் துரதிஸ்ட நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மட்டுமல்லாது ஒருசில விளம்பரங்கள் அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விளம்பரங்கள் கட்டுகோப்பு இன்றி ஒளி(ஒலி)பரப்பு செய்யப்படுவதால் இதனைப் பார்த்துவிட்டு சிறுவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை கூற தெரியாமல் எத்தனை பெற்றோர் இன்று எம்மத்தியில் தலைகுனிகின்றனர்.

adv4

அத்துடன் ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை எடுத்துக்கொள்வோமானால் இன்று ஒவ்வொரு ஊடகங்களும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கைக்கூலியாகவே செயற்படுகிறது என்பதை யாரும் மறுத்துவிட மாட்டார்கள்.சந்தர்ப்ப சூழ் நிலையும் அதுவே ஏதோ ஒரு அரசியல் கட்சியை சார்ந்திருந்தால் மாத்திரமே ஊடகங்கள் தடையின்றி தமது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும். அரசியல் விளம்பரங்களை ஒலிபரப்புவதன் மூலம் தமது செல்வத்தையும், செல்வாக்கையும் அதிகரித்துக்கொள்வதற்காக அரசியல்வாதிகளின் பின்புலன் மற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அரசியல்வாதிகளின் விளம்பரங்களை ஒளி(லி)பரப்பு செய்வதில் முனைப்பாக இருப்பதால் ஊடகங்களை நம்பிய பொதுமக்களும் அரசியல்வாதிகள் தொடர்பில் ஆராயாமல் ஊடக விளம்பரங்களை தாரகமந்திரமாக நினைத்து அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுவதை தடுக்கமுடியாமல் உள்ளது.

adv1

எனவே சமூகத்தின் மாற்றங்களுக்கும்,விழிப்புணர்வுக்கும் அச்சாரமாய் விளங்கும் ஊடகம் வரையறையற்ற ,தராதரமற்ற விளம்பரங்களை காட்சிப்படுத்தி எதிர்கால சந்ததியினரின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக அமையாமல் ,நாட்டின் எதிர்கால தலைவர்களை நல்வழிக்கு வித்திட்டால் அதுவே சிறப்பான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu