நுவரெலிய பஸ் விபத்தில் 16 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)

In இலங்கை

நுவரெலியாவிலிருந்து பட்டிபொல வரை பயணித்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் வண்டி விபத்துக்குள்ளாகி 16 பேர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

mal-1

mal-2

mal-3

mal-4

நுவரெலியா இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் வண்டி பட்டிபொலயில் இருந்து ஹக்கலை வழியாக பயணித்த போது இன்று கட்டுமான கிராமத்தில் மாலை 3.00 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் 16 பேர் காயமுற்று நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத போதும் குறித்த பிரதேசத்தில் நிலவும் அதிக பனிமூட்டமே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன்,இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu