இனவாதமும் அதன் தலைமைத்துவமும்

In கட்டுரை

பொது பல சேனா என்பது   கொழும்பை தலைநகராக கொண்டு இயங்கும் ஒரு பௌத்த தீவிரவாத அமைப்பு.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆரம்பம் முதலே சிறுபான்மை இனத்தவர்களுக்கு  எதிராக பெருமான்மை  மக்களை தூண்டிவிட்டு நாட்டில் இன முறுகலை ஏற்படுத்த  தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படும் என  சர்வதேசம் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருந்தது. எனினும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா இலங்கையின் தெற்கு பகுதிகளில் சிறுபான்மை இனத்தவர்ளுக்கு எதிரான பரப்புரைகளை செய்ய தொடங்கியது.

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளின்  தாக்குதல் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஹலால்க்கு எதிராக குரல்  கொடுத்து,  நாட்டில் உள்ள அனைத்து  விற்பனை நிலையங்களிலும் ஹலால் பொருட்கள் தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதி, பொசன் பூரணை தினத்தில் குருந்துவத்தை  விஜயராமவின் பிரதம தேரர் மற்றும் அவரது வாகன சாரதியும்இ தர்கா நகரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களால் தாக்கப்பட்டதாக  கூறி,

அன்று மாலை பௌத்த குருமார் உட்பட சில பௌத்தர்கள் அளுத்கமை நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து அங்கு இரு இனத்தவரிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டது.

பின்னர் அது வன்முறையாக மாறியது. பௌத்த இனவாதிகளால் அங்கிருந்த சிறுபான்மை மக்களின் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அதே ஆண்டில் பொதுபல சேனா அமைப்பு, அளுத்கமை, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியது.

அளுத்கமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெருந்திரளான சிங்களவர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரர், இந்நாட்டில் சிங்களக் காவல்துறையினரும், சிங்கள இராணுவத்தினருமே சேவையாற்றுகின்றனர்.

இன்று முதல் முஸ்லிம் அல்லது ஒரு தமிழரோ ஒரு சிங்களவரைத் தாக்கினால், அது அவர்களது முடிவாக இருக்கும். என கூட்டத்தினரின் பலத்த கரகோசத்தின் மத்தியில் எச்சரித்தார்.

மேலும் பொதுபல சேனாவால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தால் 4 பேர் உயிரிழந்திருந்துடன், 80 இற்கும் அதிமானோர் காயமடைந்திருந்தனர்.

குறித்த தாக்குதலுக்கு  அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது கவலையை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஆட்சிகாலத்தில் அதிகமான பள்ளிவாசல்கள், பொதுபல சேனா அமைப்பால் தாக்கப்பட்டதுடன். சிறுபாண்மை மக்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நாட்டில் 2015 ஆம் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டு ஜக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தியது.

மகிந்தவின் 8 வருட ஆட்சி காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 20 இற்கும் அதிகமான முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனால் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களும் இணைந்து  நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்து  நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதை உறுதி செய்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி தன்னுடைய தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. பொதுபலசேனா என மறைமுகமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

நல்லாட்சி உருவாகி 3 வருடங்கள் முழுமையாக நிறைவடையாக நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 80 இற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

அதில், 2015 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் கொழும்பு பொரளை பள்ளிவாசல் தாக்குதல்,

2016 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டியில் சிங்க லே என கோசமிட்டப்படி வந்த இளைஞர்கள் சிலர் அங்கிருந்த சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை, அதே ஆண்டு 5 ஆம் மாதம், கண்டி, கொழும்பு பிரதான  வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அதே ஆண்டு களுத்துறை பள்ளிவாசல் தாக்குதல் போன்றவை இடம்பெற்றிருந்து.

2016 ஆம் அண்டு, நொவம்பர் மாதம், 3 ஆம் திகதி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில்,ஞானசார தேரரின்  இனவாத பேச்சினால் தூண்டப்பட்ட சுமார் 10  இற்கும் மேற்பட்ட  பெரும்பான்மை இன இளைஞர்கள்,  புகையிரத நிலையத்திற்கு முன்பு திரண்டு முஸ்லிம்களுக்கு எதிரான தமது இனவாத கருத்துக்களை வெளியிட்டதுடன்,

ஆர்பாட்டம் செய்வதற்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை தீ வைத்துக்கொளுத்துவோம், என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது இறக்காமம் மாயக்கல்லி மாணிக்க மேடு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பகுதியில் அத்துமீறி பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எல்லா மததினரும் ஒற்றுமையாக வழிபடும் சிவனொளிபாத மலை, தற்போது சிங்கள பேரினவாதிகளின் செயற்பாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

சமீபத்தில் சிவனொளிபாத மலையில் சிங்களே அமைப்பினர், புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போட்ப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வெள்ளம்பிடிய கொஹிலவத்தையில் அமைந்துள்ள இப்ராஹிமிய்யா ஜும்ஆ முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி  மனோகணேசனின் அமைச்சுக்குள் அத்துமீறி சென்ற ஞானசார தேரர், அமைச்சரிடம் இனவாத காருத்துக்களை வெளியிட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஞான சார தேரரை கைது செய்ய சென்ற பொலிஸாரை, அவர் கடுமையான தொனியில் பேசியிருப்பது, பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நல்லாட்சியிலும் பொதுபல சேனாவின், அட்டூழியங்கள் தொடர்ந்துக்கொண்டே இருப்பதாக தெரிகிறது.

பள்ளிவாசல் மற்றும் கோயில்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது.

இதற்கொல்லாம் பின்புலத்தில்  பொதுபல சேன அமைப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டு வருகிறது.

சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறைக்கு சென்றிருந்த ஞான சாரா தேரர், மறுபடியும் தனது இனவாத செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

இவரின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் தூண்டுதல்கள் இருக்கிறாதா அல்லது இவர் சுயமாக செயற்படுகிறாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தற்போது பாராளுமன்றத்தில், தமிழ், மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள்  இருக்கின்றனர். அவர்களில் பலர் முக்கிய அமைச்சு பதவிகளை  வகிக்கின்றனர்.

எனினும் இவர்களுக்கிடையில் ஒற்றுமையின்மையால், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான இனவாதிகளின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சிறுபான்மையினரை அழிக்க நினைக்கும் இனவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமாயின் முதலில், சிறுபான்மையினரிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற இனவாதிகள் இருக்கின்ற காலத்தில்,இலங்கையில் சிறுபான்மையினர் வாழ்ந்த ஆதாரங்கள் கூட அழிந்து போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu