15 வருடங்கள் சம்பளம் இன்றி பணிபுரிந்த பெண்ணுக்கு 49 இலட்சம் நட்டஈடு

In இலங்கை

15 வருடங்களாக கொடுப்பனவு இன்றி வெளிநாட்டில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் தலையீட்டினால் 49 இலட்சம் நட்டஈடு வழங்கப்படவூள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் நிசாந்தினி என்றப் பெண் 2000ஆம் ஆண்டில் தனது 14வது வயதில் சவுதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

அத்துடன் கடந்த 15 வருடங்களாக இவர் எவ்வித கொடுப்பனவும் இன்றி பணியாற்றி வந்துள்ள தகவலானது அமைச்சர் தலாதா அத்துகோரளவிற்கு கிடைத்ததையடுத்து  ,அமைச்சர் இது குறித்து சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன்,   சவுதியின் தொழில் அமைச்சிடம் முறைபாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த பெண்ணிற்கு 4,936 ,000 ரூபாவினை சவுதி அமைச்சு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகப் பணமாக இது கருதப்படுகின்றது.

இதேவேளை இன்னும் சவுதி தூதுரகத்தில் தங்கியுள்ள இந்தப் பெண் வெகு விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்றும், இந்தப் பெண்ணிற்குரிய பணத்தினை வழங்குவதற்கு முன்வந்த அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் தலதா தன்னுடைய நன்றியினையும் தெரிவித்துள்ளார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu