அவுஸ்திரேலியாவிலிருந்து 4000 கறவை பசுக்கள் கட்டாரிற்கு

In உலகம்

கட்டாருடன் ஏனைய வளைகுடா நாடுகள் இராஜதந்திர உறவூகளை நிறுத்தியுள்ளதால் கட்டாரில் பால் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படும் என்னும் அச்சத்தால் 4000 கறவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து கட்டாரின் வர்த்தகர் ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் இன்டநெசனல் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் மௌடாஸ் அல் கயாட்; 560 கிலோ நிறையுடைய குறித்த பசுக்கள் 60 கட்டார் எயார்வேஸ் விமானங்கள் மூலம் இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘இதுவே கட்டாருக்கு சேவை செய்ய வேண்டிய தருணம்” என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 5ஆம் திகதி முதல் கட்டார் புதிய இறக்குமதியினை ஆரம்பித்துள்ளதாகவும்இஇதற்கமைய உணவு வகைகள்,  கட்டிட உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட சர்வதேச வர்த்தக நடவடிக்கை வழமைப் போல் நடைபெறுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதற்கமைய துருக்கியில் இருந்து பால் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் ஈரானில் இருந்து இறக்கமதி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் என்பன வழமைபோல் இறக்குமதி செய்யபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu