invisible hit counter

நாளை முதல் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு

In இலங்கை

நாளை முதல் பெறுமதி சேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுகின்றமையின் ஊடாக தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன.

சுமார் 80 பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக பெறுமதி சேர் வரி விடுவிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், தொலைபேசி மற்றும் தபால் கட்டணங்கள் அந்த வரிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி 15 வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றமையை அடுத்து, தொலைபேசி கட்டணங்கள் 48 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி ஒழுங்குப்படுத்தல் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி மற்றும் தேசிய கட்டட வரி ஆகியவற்றுக்கு மேலதிகமாக இரண்டு வகையான வரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, செச் வரி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு ஆகிய வரிகளும் அறவிடப்படுகின்றன.

தொலைபேசி ஒழுங்குப்படுத்தல் சேவைகளின் போது செச் வரி 2 வீதமாகவும், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் வரி 25 வீதமாகவும், தேசிய கட்டட வரி 2 வீதமாகவும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், பெறுமதி சேரி வரி 15 வீதமாக அறவிடப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu