அமைச்சர் ரவி பதவி விலகியுள்ளார்

In 360 Breaking, 360 Just In, Budget 2017, முக்கிய செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவி விலகல் குறித்து தற்போது நாடாளுமன்றில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

தனத கட்சிக்காக,நாட்டின் தலைவருக்காக,மக்களுக்காக இந்த முடிவினை எடுத்தள்ளதாகவும்  ரவி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் இவருக்கு எதிராக கூட்டுஎதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டுவந்துள்ள நிலையில்,இதுகுறித்த விவாதங்கள் இன்று நாடாளுமன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அமைச்சர் ரவி தனது பதவி விலகல் தொடர்பில் விசேட உரையை ஆற்றினார்.

இதன்போது கடந்த பல வாரங்களாக ஊடகங்கள் ஊடாக தன்மீது குற்றச்சாட்டு தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரங்களை மீண்டும் கைப்பற்றுவதற்காகவும்,நல்லாட்சியின் செயற்பாடுகளை குழப்புவதற்காகவுமே இவ்வாறான நடவடிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் ரவி குறிப்பிட்டார்.

பதவி விலக தீர்மானித்தமை தொடர்பில் கவலையடையவில்லை என்றும், அரசாங்கத்தை பாதுகாக்கவே பதவி துறப்பதாகவும் தெரிவித்தார்.

தான் சட்டவிரோமாக பணம் சம்பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பணத்திற்காக ஆரம்பிக்கவில்லை என்றும், தனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu