கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய விசேட குழு

In Budget 2017

கடந்த 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகள் உள்ளிட்டவை தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா கோரிக்கை விடுத்தார்.

மஹிந்தவின் ஆட்சியில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த நிவாட் கப்ரால் மீது இவ்வாறு மோசடி வழக்கு சுமத்தப்பட்டுள்ள நிலையில்,அவருக்கு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

எனவே தவறிழைத்தவர்கள் யாராகியிருந்தாலும் அவர்களை பிடித்து சிறையில் அடைக்குமாறும் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதங்களில் கலந்தக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க பதவி விலகியதன் மூலம் நாட்டின் ஜனநாயக ஆட்சி வெளிப்பட்டுள்ளதாகவும்,கடந்த காலத்தில் இவ்வாறான நிலை காணப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஸ குறிப்பிட்டார்.

அன்றைய ஆட்சியில் அமைச்சர் சரத் பொன்சேகா மிருபத்தைப் போல சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும்,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதுவே அன்றைய ஜனநாயகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இன்றைய நல்லாட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாலேயே அமைச்சர்களிடமும் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu