புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன

In இலங்கை, முக்கிய செய்திகள்

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதையடுத்து குறி;த்த அமைச்சுப் பதவிக்கு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் திலக் மாரப்பன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான இவர் இதற்கு முதல் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில்,எவன்கார்ட் சம்பவம் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

எனினும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்தின் பின்னர் திலக் மாரப்பன அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை வெற்றிடம் நிலவிய வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு அமைச்சர் சாகல,ஹர்ஷ த சில்வா மற்றும் நவீன் திசாநாயக்கவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu