அமைச்சர் விஜயதாச இன்று விசேட உரை

In முக்கிய செய்திகள்

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று தனது அமைச்சில் விசேட உரையாற்றவுள்ளார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய இறுதி நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அமைச்சருடன் கலந்தரையாடலில் ஈடுபட்ட பின்னரே அமைச்சர் விஜயதாச இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது அமைச்சுப் பதவிகளில் இரண்டிலும் இருந்து இன்று விலகும் தீர்மானத்தை எடுக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பதவி விலகும் பட்சத்தில் அவருடைய நீதி அமைச்சானது ஜயம்பதி விக்ரமரத்னவுக்கு வழங்கலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகாவிடின் இன்று மாலை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் குழு கூட்டத்தில் அமைச்சரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu