புதிய அரசியலமைப்பில் தமிழும்,சிங்களமும் ஆட்சி மொழியென உள்ளடக்கப்பட வேண்டும்

In Budget 2017

புதிய அரசியலமைப்பில் தமிழும்,சிங்களமும் ஆட்சி மொழியென ஒரே வாக்கியத்தில் இடம்பெற வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நமோ நமோ மாதா என்று தமிழர்கள் பாடுவதை விட நமோ நமோ தாயே என பாடும் போது நாட்டு உணர்வு மேலிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மனோ இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நல்லிணக்கத்திற்காக பல வியடங்களை முன்னெடுத்து வரும் அமைச்சர் மனோவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா வாழ்த்தி;னையும் தெரிவித்தார்.

இதற்கமைய சகல பெயர் பலகைகளிலும் 3 மொழிகளிலும் எழுதப்படுவது அவசியம் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்;டதுடன்,நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸின் வாழ்த்து தனக்கு நெகிழ்ச்சியளிப்பதாகவும் அமைச்சர் மனோ குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கு கிழக்கு பகுதகளில் உள்ள பெயர் பலகைகளில் முதலாவது சிங்களத்திலும்,இரண்டாவதாக தமிழிழும் எழுத்துப் பிழைகள் இன்றி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அனைத்து சிங்கள வார்த்தைகளுக்கும் தமிழ் மொழிப்பெயர்ப்பு இருக்க வேண்டும் என்பது போல அனைத்து தமிழ் வார்த்தைகளுக்கும் சிங்கள வார்த்தைகள் இருப்பது அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் சகல அரச கடிதங்களும் 3 மொழிகளிலும் அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று கடந்த 14ஆம் திகதி தமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்;சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu