மலையகத்தில் விநாயகர் சதுர்த்தி!!

In கலாச்சாரம்

விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றாகும்.

இந்துக்களின் முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தை, உலக வாழ் இந்துக்கள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவன் பார்வதியின் முதற்பிள்ளையான பிள்ளையார் ஆவணி சதுர்த்தியில் அவதரித்தாக புராணங்கள் கூறுகின்றன.

dsc08185

காணபத்திய வழிபாட்டில் மாதாந்தம் வருகின்ற சதுர்த்தியினை விட, ஆவணி மாத சதுர்த்தி சிறப்பிடம் பெறுகின்றது.

dsc08179

கணங்களின் அதிபதியாகவும் விக்கினங்களை தீர்ப்பவராகவும் முதல் கடவுளாகவும் விளங்கும் விநாயகரின் முதன்மை விரதமாக ஆவணி சதுர்த்தி விளங்குகின்றது.

dsc08161

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகின்ற விநாயகர் சதுர்த்தியானது, தனிச்சிறப்பு வாய்ந்தது என இந்துக்கள் நம்புகின்றனர்.

dsc08164

அந்தவகையில் மலையகத்திலும் பல ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய விநாயகர் ஆலயங்களில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சில ஆலயங்களில் மஞ்சலால் செய்த  விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

dsc08160

இந்த விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பெருந்திரளான பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

dsc08169

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu