7 அரச நிறுவனங்களின் பாரிய மோசடி அறிக்கை ஜனாதிபதியினால் கையளிப்பு

In முக்கிய செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் 7 அரச நிறுவனங்களில் பாரிய அளவில் நிதி மோசடி,ஊழல்,அரச சொத்துக்களை துஸ்பிரயோகப்படுத்தியமை தொடர்பிலான விசாரணை அறிக்ககைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டமா அதிபரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான    ஜயந்த ஜயசுரியவிடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 7 அறிக்கைகள் குறித்து சட்டநடவடிக்கைகள் எடுக்குமாறு ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த 7 அறிக்கைகள் தொடர்பில் சட்ட ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்,ஸ்ரீலங்கன் கேட்டரின் நிறுவனம்,அம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கை போக்குவரத்து சபை, உடரட்ட அபிவிருத்தி அதிகாரசபை, நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை மற்றும் வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரகோனுக்கு எதிரான விசாரணை அறிக்கைகள் உள்ளிட்டவை ஜனாதிபதியினால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu