உலக காணாமற்போனோர் தினம் இன்று அனுஷ்டிப்பு

In முக்கிய செய்திகள்

உலகின் பல நாடுகளிலும் உலக காணாமற்போனோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொலிஸார் அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட ‘கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு’ என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.

இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த யுத்தக்காலம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் சுமார் 40,000 பேர் காணாமல் போயுள்ளதுடன்,இதுதொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அமைய 20,000 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை முன்கொண்டு செல்கின்றன.

காணாமல் போன தங்களின் உறவினர்களுக்கு என்னானது என்பது குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் 180 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைவரும் கலந்துகொள்ளுமாறு, முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து ஆதரவளிக்குமாறும் கோரியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. அனைத்து பொதுமக்கள், அமைப்புகள், அரசியல்வாதிகளையும் குறித்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

இதேவேளை, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எமது புலம்பெயர் உறவுகளும், எமக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்’ எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu