அதிகூடிய அதிகார பகிர்வுடன் தீர்வு வரவேண்டும்: சம்பந்தன் (வீடியோ)

In முக்கிய செய்திகள்

அதிகூடிய அதிகார பகிர்வுடன் தீர்வு வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ. எதிர்க் கட்சித் தலைவருமான அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நினைவில் கலந்து கொண்டு பிரதம உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் அவர், இந்த நாட்டில் சமஸ்டி இருக்க வேண்டும் என தந்தையும் அமிரும் உறுதியாக இருந்தனர். வடக்கு கிழக்கில் சமஸ்டியை விளக்கி ஆதரவைப்பெற முயன்றனர்.

தமிழீழத்தை கோரிய பின்பும் மாவட்ட சபையில் போட்டியிட்டு நியாயமான சமாதானத்திற்கு வர தயார் என உலகிற்கு நிரூபித்தோம். ஆயுதபோராட்டத்தை ஏற்கும் நிலமை இருந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டிருந்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu