அனிதாவுக்காக காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள்

In தமிழ்நாடு

நீட் தேர்வினால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது.

இரண்டு நாட்களாக திருச்சியி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில்  தற்போது சத்திரம் பஸ் நிலையம் அருகில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் 10 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது 200இற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளதாகவும் மேலும் அதிகமான மாணவர்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மாணவர்கள், என்ன நடந்தாலும் போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும், விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu