SL VS INA இடையில் 20க்கு20 போட்டி இன்று

In விளையாட்டு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒற்றை  கிரிக்கட் போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தாம் பங்குபற்றிய அனைத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளையும் வெற்றி கொண்டது.
இதன்படி டெஸ்ட் தொடரை 3க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 5க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை அணியை சொந்த மண்ணில் 5க்கு0 என்ற கணக்கில் ஒருநாள் தொடர் ஒன்றில் முதன்முறையாக வீழ்த்திய சாதனையையும் இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் போட்டி இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணி தமது முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டியை விளையாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் இந்த மாதம் 28ம் திகதி முதல் ஆரம்பமாகும் இந்த தொடரின் ஒரு போட்டி இரவு பகல் போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இருபதுக்கு இருபது போட்டியில், குறித்த வீரர்கள் விளையாட கூடும் என, இந்திய மற்றும் இலங்கை அணியின் பெயர் பட்டியல் ஒன்றை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

Sri Lanka (possible): 

1 Niroshan Dickwella (wk), 
2 Upul Tharanga (capt), 
3 Dilshan Munaweera,
4 Angelo Mathews, 
5 Milinda Siriwardana/ Ashan Priyanjan, 
6 Dasun Shanaka/Seekkuge Prasanna, 
7 Thisara Perera, 
8 Akila Dananjaya, 
9 Jeffrey Vandersay, 
10 Lasith Malinga, 
11 Vikum Sanjaya.

India (possible): 

1 Virat Kohli (capt), 
2 Rohit Sharma, 
3 KL Rahul, 
4 Manish Pandey, 
5 MS Dhoni (wk), 
6 Kedar Jadav, 
7 Hardik Pandya, 
8 Kuldeep Yadav, 
9 Bhuvneshwar Kumar, 
10 Yuzvendra Chahal, 
11 Jasprit Bumrah.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu