அவுஸ்திரேலியா தாக்குதல் சூத்தரதாரிக்கு கிடைத்த தண்டனை!!

In உலகம்

அவுஸ்திரேலியா தாக்குதல் நடத்த சதி செய்த தீவிரவாத கும்பலின் தலைவனுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள அந்த நாட்டின் மத்திய  பொலிஸ் அலுவலகத்தின் மீதும், அதன் அருகே லித்கவ் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறை மீதும் தாக்குதல் நடத்த சதி நடந்தது. 2014-ம் ஆண்டு நடந்த இந்த சதியை நியூ சவுத்வேல்ஸ் பொலிஸ் படை வெற்றிகரமாக முறியடித்தது.

இந்த சதியில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் தலைவன் சுலைமான் கலீத் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது நியூ சவுத் வேல்ஸ் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்ரி பெல்லி, இந்த தீவிரவாத கும்பலின் தலைவன் சுலைமான் கலீத், தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு 6 வார காலம் பல்வேறு விதங்களில் திட்டம் தீட்டி வந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான, வன்முறையான, வக்கிரமான சித்தாந்தத்தால் உந்தப்பட்டுள்ளதாகவும் கூறியதுடன், இத்தகைய செயல்களுக்கு நாகரிக சமுதாயத்தில் இடம் கிடையாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu