கெட்டலோனியா தலைவருக்கு பிடியாணை!!

In உலகம்

தனிநாடு பிரகடணம் செய்தகெட்டலோனியா தலைவர் பூட்ஜியமோண்ட், சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு  எதிராக பிடியாணை பிறப்பித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கெட்டலோனியா தனிநாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது.இந்த வாக்கெடுப்பில் கெடலோனிய தனி நாடாக பிரிவிதற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்துஇ கடந்த மாதம் 27ஆம் திகிதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கெட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு பின்னர் இந்த அறிப்பு வெளியானது.

கெட்டலோனியா சுதந்திர பிரகடணம் செய்த சில மணிநேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. கலைக்கப்பட்ட கெட்டலோனியா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கெட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஸ்பெயின் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர், ஜெர்மனியில் இருப்பதால் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu