அமெரிக்காவில் 10 மாதத்தில் 13 ஆயிரம் பேர் மரணம்…

In அமெரிக்கா, உலகம்

வலிமையான இராணுவம் கொண்ட அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும்,அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்கா மீதான பார்வையில் பயத்தை ஏற்படுத்துகிறது.

நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் எதற்காக இப்படி சிலர் துப்பாக்கிகளை கொண்டு அப்பாவிகளை கொன்று வருகின்றனர்? என்ற கேள்வி எழாமல் இல்லை. நேற்று, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சுதர்லாண்ட் என்ற பகுதியில் உள்ள சர்சில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படித்தாலே மனதை மரமரத்து போகச்செய்யும் புள்ளிவிபரம் துப்பாக்கி தாக்குதல் குறித்து வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 13,149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதில், 307 சம்பவங்கள் பெரியது என குறிப்பிடப்பட்டுள்ளன.

தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களை கணக்கிட்டால் இது வெறும் 1 சதவிகிதம் தான்.

இவ்வளவு பேர் உயிரிழந்திருந்தாலும் துப்பாக்கிகளால் பிரச்சனை இல்லை அதனை கையாளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தான் பிரச்சனை என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

You may also read!

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu