முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவுடன் தான் செய்துக்கொண்ட ஒப்பந்தம் சட்டரீதியானது,தனக்கு இதுபற்றி போதிய விளக்கமில்லாமல் கையெழுத்திட்டதாக நாடாளுமன்றத்திடம் கடிதம் வழங்கினால் தாம் குறித்த ஹம்பாந்தோட்ட அபிவிருத்தி திட்டத்தை கைவிடுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த வருடத்தில் முதல் தடவையாக கூடியுள்ள நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறானதொரு அபிவிருத்தி திட்டத்திற்காக சீனாவுடன் மஹிந்த செய்துக்கொண்ட ஒப்பந்தத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த மாதம் மஹிந்த உள்ளிட்ட குழுவினர் சீனாவுக்கு சென்று அங்குள்ள ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பின் அவசியம் என்ன என்றும் இதன்போது கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை மஹிந்த முன்னெடுத்திருந்தால் இவர்கள் பாராட்டியிருப்பார்கள் என்று தெரிவித்த பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால இதனை முன்னெடுத்ததாலேயே பொறாமையில் கூட்டு எதிர்கட்சியினர் இதனை எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.