invisible hit counter

பிரியாவிடையில் கண்ணீருடன் நன்றியுரைத்த ஒபாமா(வீடியோ)

In 360 Just In, உலகம், முக்கிய செய்திகள்
obamafarewellspeech

தற்போதைய அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் எனக்கும், எனது மனைவி மிச்செலுக்கும் அதிகளவில் வாழ்த்துக்கள் வந்தன. அதற்காக மக்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கு இந்த நேரத்தில் நான்  நன்றி கூற விரும்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் மக்களிடமிருந்தும் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

அதுவே என்னை அமெரிக்காவின்  சிறந்த அதிபராக்க மாற்றியது என்று கூறிய ஒபாமாவின் கண்களில் வந்த கண்ணீர் அமெரிக்க மக்களை நெகிழச் செய்தது.

அமெரிக்கா தற்போது பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியும் சிறப்பான முன்னேற்றத்தை  கண்டுள்ளதுடன்,  நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் ஒற்றுமையில் மாத்திரமே மாற்றத்தையும் வளர்ச்சியையும் காணமுடியும். மேலும்,  ஜனநாயகத்தின் கையில் தான் எமது வளர்ச்சி தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

8 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளேன். ஒன்றாகவே  வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம்.பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை  சிறந்த பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

You may also read!

principal

அதிபர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க இணக்கம்

அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட கொடுப்பனவானது அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சி மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம்

Read More...
slippery

நீரில் மூழ்கியுள்ள தெற்கு அதிவேகப் பாதை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தெற்கு அதி வேகப் பாதையின் வெளிபன்ன மற்றும் கொக்மாதுவ உள்நுழையும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி ஊடாக

Read More...
kodanadu_estate_1_08585

கொடநாடு கொலை குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்!!

கொடநாடு எஸ்டேட்டில், இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, வட இந்தியாவில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்யும்  நடவடிக்கைகளில் பொலிஸார்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu