invisible hit counter

விமலின் கைது அரசியல் பழிவாங்கல் இல்லை-அஜித்

In முக்கிய செய்திகள்

நேற்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் கைதில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை என எரிசக்தி பிரதிஅமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

40 அரச வாகனங்களை விமல் வீரவன்ஸ முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த 40 வாகனங்களால் அரசுக்கு 9,16இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் இந்த வாகனங்களுக்கான எரிபொருள் செலவு,சாரதிகளுக்கான சம்பளம் என்பவற்றை அமைச்சே செலுத்தியதாகவும்,இந்த வாகனங்களுள் ஒன்று கூட அரச தேவைக்காக பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் குறித்த வாகனங்களை தனது உறவினர்களுக்கே வழங்கியுள்ளதோடு,இவற்றில் ஒரு வாகனமானது ஊடகவியலாளர் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அரச வாகனங்கள் எந்தவொரு அமைச்சுக்கும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த வழங்கவி;ல்லை என்று சுட்டிக்காட்டிய அவர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாகன முறைப்பாடானது முறையான விதத்தில் விசாரிக்கப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அஜித்.பீ.பெரேரா தெரிவித்தார்.

You may also read!

hotel

5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்

Read More...
53806_8

எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.

Read More...
police

பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்

Read More...

Leave a reply:

Your email address will not be published.

Mobile Sliding Menu